search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    டெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

    டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக ஆகியவை முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    அல்கா லம்பா சாந்தினி சவுக் தொகுதியில் இருந்தும், அர்விந்தர் சிங் லவ்லி காந்தி நகர் தொகுதியில் இருந்தும், ஆதர்ஷ் சாஸ்திரி துவாரகா தொகுதியில் இருந்தும் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆதர்ஷ் சாஸ்திரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் என்பதும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×