search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம்

    அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி தோல்வி அடைந்ததால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மோடி அரசு கையில் எடுத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு  (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள் எதிர்த்தன. மேற்குவங்காளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

    இதேபோல குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று 2020-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அதற்காக 16 கேள்விகள் அடங்கிய ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தாயார், தந்தை பிறந்த இடம் அல்லது நாடு குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக கொல்கத்தாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ‘எங்கள் நோக்கம் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) ஆகியவற்றின் மோசமான நோக்கத்தை எதிர்த்துப் போராடுவது ஆகும். இந்த மூன்றையும் எதிர்த்து போராடும் எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டும். தேசிய மக்கள் பதிவேட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. 

    அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி தோல்வி அடைந்ததால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மோடி அரசு கையில் எடுத்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி) மாறுவேடம் தான்’ என தெரிவித்தார்.
    Next Story
    ×