search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம்

    பொங்கல் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது.
    திருமலை:

    பொங்கல் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 21 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.

    இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. ரூ.300 டிக்கெட் பக்தர்கள், திவ்ய தரிசன பக்தர்கள், டைம் ஸ்லாட் தரிசன பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த கூட்டம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள மூலஸ்தான எல்லையம்மனுக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இக்கோவிலில் குடி கொண்டிருக்கும் எல்லையம்மன் ஏழுமலையானின் தங்கையாக கருதப்படுகிறார்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் எல்லையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி தன் தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து சென்று எல்லையம்மன் கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். கோவில் வாயிலில் பட்டு வஸ்திரத்துக்கு மரியாதை அளித்து பெற்றுக் கொண்டு அம்மனுக்கு அணிவித்தனர்.
    Next Story
    ×