search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாத்மா காந்தி
    X
    மகாத்மா காந்தி

    ‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

    மகாத்மா காந்திக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு ‘பாரத ரத்னா’வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி என கருத்து தெரிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அனில் தத்தா சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்

    மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாத்மா காந்தி பாரத ரத்னா விருது என்ற அங்கீகாரத்தை விட மேலானவர் என்றும் மக்கள் அவரை இந்த விருதைவிட உயர்வாக மதிக்கிறார்கள் என்றும் கூறினார்கள்.

    மகாத்மா காந்தியை சிறந்த முறையில் கவுரவிக்க வேண்டும் என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் இந்த தேசத்தின் தந்தையான அவர் இதுபோன்ற அங்கீகாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    பின்னர், மனுதாரர் வேண்டுமானால் இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் என்றும் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×