search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

    நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது.

    குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை டெல்லி அரசு, டெல்லி துணை நிலை ஆளுநர், உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது. இதையடுத்து, முகேஷ் சிங் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் இன்று நிராகரித்தார்.

    இதற்கிடையே, நிர்பயா குற்றாவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை ஆம் ஆத்மியால் நிறைவேற்ற முடியவில்லை என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

    இந்நிலையில், நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரகாஷ் ஜவடேகர் ஜி ஏதோ கூறுகிறார், ஸ்மிருதி இரானி ஜியும் வேறு ஏதோ கூறுகிறார். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் எந்த நன்மையும் ஏற்படாது. குற்றம் நடந்த 6 மாதங்களுக்குள் கற்பழிப்பாளர்கள் தூக்கிலிடப்படும் ஒரு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். 

    நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் முயற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரை உருவாக்க இணைந்து செயலாற்றுவோம் என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×