என் மலர்

  செய்திகள்

  தொண்டர் கொடுத்த சேவலுடன் நடிகை ரோஜா. அருகில் கணவர் செல்வமணி.
  X
  தொண்டர் கொடுத்த சேவலுடன் நடிகை ரோஜா. அருகில் கணவர் செல்வமணி.

  சேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேவல் சண்டை என்பது ஆந்திர மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும் அப்போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது என்றும் ரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  நகரி:

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இணையாக ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது.

  பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதை போல, சங்கராந்தியையொட்டி ஆந்திராவில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டை போட்டி நடத்தப்படுகிறது.

  இந்த நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது கட்சித் தொண்டர்கள் சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்படும் சேவலுடன் அவரை சந்தித்தனர். அந்த சேவலை கையில் வாங்கி தடவி கொடுத்த ரோஜா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சேவல் சண்டை என்பது ஆந்திர மக்களின் பாரம்பரிய விளையாட்டு. வெளிநாடு வாழ் இந்தியர்களும் சேவல் சண்டையை பார்த்து ரசிப்பதற்காகவே ஆந்திரா வருகிறார்கள்.

  ஆனால் பல இடங்களில் சேவல் காலில் கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தப்படுகிறது. அது போன்று சேவலை துன்புறுத்தக் கூடாது. காலில் கத்தி கட்டாமல் சேவல் சண்டை நடத்த வேண்டும்.

  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசே‌ஷம் உள்ளது. முன்பு கூட்டுக் குடும்பங்களில் சிறுவர்களுக்கு பெரியவர்கள் பண்டிகைகளின் விசே‌ஷம் பற்றி கூறுவார்கள். இன்று தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டதால் பலர் அதன் முக்கியத்துவத்தை அறிவதில்லை. பண்டிகைகளும், பாரம்பரிய விளையாட்டுக்களும் நடத்தப்படும் போதுதான் அதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அப்போது ரோஜாவின் கணவரும், டைரக்டருமான செல்வமணி உடன் இருந்தார்.
  Next Story
  ×