search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்வெளி வீரர்
    X
    விண்வெளி வீரர்

    ‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷியாவில் பயிற்சி

    ‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷியாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா முதல்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவிலான திட்டம் ஆகும். இந்தியாவின் அதிக எடைகொண்ட செலுத்து வாகனமான ‘பாகுபலி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள், விண்வெளிக்கு செல்கிறார்கள்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, 2022-ம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, விண்வெளிக்கு செல்ல பலகட்ட தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

    ககன்யான் திட்டத்திற்கான வீரர்கள் தேர்வு

    அவர்களுக்கு ரஷியாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்குகிறது. 11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் பகுதி சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். அந்த சாதனத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயிற்சிகளை அவர்கள் பெறுவார்கள்.

    இந்த தகவல்களை மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×