search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்
    X
    சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

    நிழல் உலக தாதாவை இந்திரா காந்தி சந்தித்ததாக கூறியதற்கு எதிர்ப்பு - சிவசேனா எம்.பி. தனது கருத்தை திரும்ப பெற்றார்

    இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
    மும்பை:

    புனேயில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு காலத்தில் மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும், மந்திராலயாவில் யார் இருக்க வேண்டும் என நிழல் உலக தாதாக்கள் தான் முடிவு செய்தனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அப்போதைய நிழல் உலக தாதாக்களில் ஒருவரான கரீம் லாலாவை பைதானியில் சந்தித்தார். தாதா கரீம் லாலாவை இந்திராகாந்தி சந்தித்ததாக சஞ்சய் ராவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில், இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்திரா காந்தி தொடர்பாக எனது கருத்து அவரது பெயருக்கோ அல்லது யாருடைய உணர்வுகளையோ புண்படுத்தியதாக கருதினால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×