என் மலர்

  செய்திகள்

  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
  X
  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

  ஆளும் கட்சி எம்எல்ஏ ஷர்மா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.
  புதுடெல்லி:

  டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக முனைப்பு காட்டி வருகின்றன.

  ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருபவர் என்.டி.ஷர்மா. இவர் தற்போது டெல்லியில் உள்ள பதார்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். 

  இந்நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான என்.டி.ஷர்மா இன்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இடங்களை பணத்துக்காக அக்கட்சி விற்று வருகிறது என குற்றம் சாட்டினார்.

  சட்டசபை தேர்தல் அறிவித்த சில தினங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. அக்கட்சியில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×