search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
    X
    மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

    பாகிஸ்தானை மகிழ்விக்கும் எதிர்க்கட்சி தீர்மானம்- மத்திய மந்திரி சாடல்

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானத்தால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு செயல்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அது ஏழை மக்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும், அரசியலமைப்புக்கு விரோதமான தொகுப்பின் ஒரு பகுதி எனவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானத்தால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்திருக்கும். இந்த சட்டமானது, சிறுபான்மையினர் மீதான பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை அம்பலப்படுத்தும் வாய்ப்பு ஆகும். 

    எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

    சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற முக்கிய கட்சிகள், பங்கேற்காததில் இருந்து, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. 

    எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தேசிய நலனுக்காகவோ அல்லது பாதுகாப்பு நலனுக்காகவோ நிறைவேற்றப்படவில்லை. துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, அண்டை நாடுகளில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினரின் நலனுக்காகவும் இந்த தீர்மானம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×