search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது? -பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி

    இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது? என மாணவர்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம்  யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி மாணவர்களிடம் பிரதமர் மோடி விளக்க வேண்டும். இளைஞர்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக தேசத்தை திசைதிருப்பவும் மக்களை பிளவுபடுத்தவும் நரேந்திர மோடி முயற்சிக்கிறார். 
    பிரதமர் மோடி.
    இளைஞர்களின் குரல் முறையானது, அதனை அடக்கக்கூடாது, அரசாங்கம் அதனைக்கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு முன்னால் நிற்க அவருக்கு தைரியம் இல்லை. எந்த ஒரு பல்கலைக்கழகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக சென்று இந்த நாட்டிற்கு என்ன செய்ய போகிறார் என்று உரையாட முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    Next Story
    ×