search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    போலீசார் தாக்கப்படும் பகீர் வீடியோ - உண்மை காரணம் இதுவா?

    சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் போலீசார் தாக்கப்படும் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான உண்மை காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.



    டெல்லியில் இரண்டு போக்குவரத்து போலீசார் மர்ம கும்பலால் தாக்கப்படும் பகீர் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இது 2015-ம் ஆண்டு டெல்லியின் கோகுல்பூரி பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரை மர்ம கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது.

    இந்த வீடியோ முஸ்லிம் மதத்தினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர் எனும் குற்றச்சாட்டுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துடன் தொடர்பு படுத்தி வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    சமூக வலைதளங்களில் பழைய வீடியோவிற்கு, "விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் செலுத்த செல்லான் வழங்கிய போலீசாரை முஸ்லிம்கள் தாக்குகின்றனர். இது நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது." என தலைப்பிடப்பட்டுள்ளது. இதே தலைப்பில் இந்த வீடியோ ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வருகிறது.

    உண்மையில் இந்த வீடியோ டெல்லியின் கோகுல்பூரி பகுதியில் 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், வாகன சோதனையின் போது ஒரே மோட்டார்சைக்கிளில் மூன்று பேர் பயணித்ததற்கு செல்லான் வழங்கியதை எதிர்த்து துவங்கிய வாக்குவாதம் முற்றி கும்பல் ஒன்றுகூடி போலீசார் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். 

    இதே வீடியோ யூடியூபிலும் பல்வேறு சேனல்கள் பதிவேற்றம் செய்திருக்கின்றன. அந்த வகையில் வைரல் வீடியோவிற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×