search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள் மீது 14ம் தேதி விசாரணை

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்று தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளிகளில் 2 பேர் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுக்கள் மீது, வரும் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
    புதுடெல்லி:

    டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர் விடுதலை செய்யப்பட்டான். ராம்சிங் என்ற குற்றவாளி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் இந்த தண்டனையை உறுதி செய்தன. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    இதனையடுத்து,  குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. எனவே, திகார் சிறையில் அவர்களை தூக்கிலிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் குற்றவாளிகளில் வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கான கடைசி சட்ட வாய்ப்பு இதுவாகும்.

    இந்நிலையில், குற்றவாளிகள் 2 பேரின் மறுசீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஆர்.எப்.நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுக்களை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×