search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கி கூறும் ராணுவ அதிகாரி
    X
    வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கி கூறும் ராணுவ அதிகாரி

    ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பிரமுகர்களுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு

    ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு தூதர்கள் குழு, ஸ்ரீநகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்களை சந்தித்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

    இதற்கிடையே, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கொண்ட குழுவினர், இரு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றனர். 

    தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் இன்று ஸ்ரீநகரை  சென்றடைந்தனர். அவர்களுக்கு ராணுவ அதிகாரி டி ஜே எஸ் தில்லான், ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து விவரித்தார். அதன்பின்னர், வெளிநாட்டு தூதுக்குழுவினர் ஸ்ரீநகரில் உள்ள மக்கள் குழுவினரையும் சந்தித்தனர்.

    வெளிநாட்டு குழு ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×