search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரியும் காட்சி
    X
    விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரியும் காட்சி

    பள்ளி பேருந்துடன் மோதி தீப்பிடித்த எரிவாயு லாரி... அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்

    சூரத்தில் இன்று பள்ளி பேருந்தும் எல்பிஜி லாரியும் மோதி தீப்பிடித்தன. இதில், பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரியும், பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

    மோதிய வேகத்தில் எரிவாயு லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதனால் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுபோன்று புகைமண்டலம் எழுந்தது. 


    பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் அந்த பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. உரிய நேரத்தில் குழந்தைகளை மீட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    சிலிண்டர் விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×