search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி நிதின் கட்காரி
    X
    மத்திய மந்திரி நிதின் கட்காரி

    பயணிகளுக்கு விமானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேன் - நிதின் கட்காரி தகவல்

    விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் டீ, காபி போன்ற பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேன் வழங்க விமான நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் என்று நிதின் கட்காரி தெரிவித்து உள்ளார்.
    புனே:

    மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்து உள்ள மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

    பொதுவாக ஒரு கரண்டி தேனானது 3 கரண்டி சர்க்கரைக்கு சமமானது. தற்போது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் (டீ, காபி) பானங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையே பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக தேன் பாக்கெட்டுகள் அல்லது தேன் கட்டிகளை விமானங்கள் மற்றும் ஓட்டல்களில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

    பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப சர்க்கரை அல்லது தேன் வழங்க முயற்சி செய்வோம். இது குறித்து ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர் மற்றும் காதி கிராமோத்யக் ஆணையத்தின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன். விமானங்களில் சர்க்கரை, தேன் ஆகிய இரண்டும் கிடைக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்வேன். 

    தேன் உற்பத்தியை அதிகரிக்க தேன் உற்பத்தி மையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் தேனில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரிக்கவும் அரசு திட்டமிட்டு இருக்கிறது. தேன் உற்பத்தி மையங்கள் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்துக்கு பயனுள்ளதாக அமையும். இதன்மூலம் விவசாயிகளின் வருமானமும் அதிகமாகும். 
    கோப்பு படம்
    மத்திய சிறு,குறு,நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம் கிராமப்புற பொருளாதாரத்தின் வருவாயை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளது. பால், தேன், மூங்கில், கடல் சார்ந்த பொருளாதாரம் மற்றும் இயற்கை எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் வலுப்படுத்தப்பட்டு கிராமப்புற பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×