search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி
    X
    ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி

    திமுக எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து

    தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.

    அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

    சென்னை சி.ஐ.டி. காலனி வீட்டில் தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசிபெற்ற கனிமொழி மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    அதன்பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    ஒம் பிர்லா டுவிட்

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி  நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பீர்கள் என நம்புகிறேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×