search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி
    X
    பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி

    நாங்கள் 80 சதவீதம், நீங்கள் 18 சதவீதம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பகிரங்க மிரட்டல்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் முஸ்லிம் மக்களை எச்சரிக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெல்லாரி:

    மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

    இந்த சட்டத்தினால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. அத்துடன், இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் பாஜக மேற்கொண்டுள்ளது. எனினும், முஸ்லிம்களின் போராட்டம் ஓயவில்லை.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி, போராட்டத்தில் பங்கேற்கும் சிறுபான்மை முஸ்லிம்களை எச்சரிக்கும் வகையில் பகிரங்கமாக தனது கருத்தை தெரிவித்தார்.

    ‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நாங்கள் 80 சதவீதம், நீங்கள் (முஸ்லிம்கள்) 18 சதவீதம். நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். 

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக நீங்கள் சென்றால், அது நன்றாக இருக்காது. நீங்கள் விரும்பினால், பாகிஸ்தானுக்கு போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதேசமயம் வேண்டுமென்றே நாங்கள் உங்களை அனுப்ப மாட்டோம்’ என்றார் சோமசேகர் ரெட்டி.
    Next Story
    ×