search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுராக் தாக்கூர்
    X
    அனுராக் தாக்கூர்

    சோனியாவும், ராகுல்காந்தியும் நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள்: அனுராக் தாக்கூர்

    குடியுரிமை சட்ட விவகாரத்தில் சோனியாவும், ராகுல்காந்தியும் நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
    நாக்பூர் :

    நாக்பூரில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் செய்த வரலாற்று பிழைகள் சரி செய்யப்பட்ட ஆண்டு 2019. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370, 34ஏ சட்டப்பிரிவுகள், முத்தலாக் ஆகியவற்றை நரேந்திர மோடி அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. ராமர் கோவில் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டால் தீர்க்கப்பட்டது. ஒட்டு மொத்த நாடும் இதை ஏற்றுக்கொண்டது.

    இது தவிர, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான வரலாற்று முடிவை பாரதீய ஜனதா எடுத்தது. இந்த மசோதா குடியுரிமை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்டதே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல.

    சோனியா, ராகுல்காந்தி

    குடியுரிமை திருத்த சட்டத்தில் குடியுரிமையை பறிக்கும் வகையில் ஒரு வார்த்தையாவது இடம் பெற்று உள்ளது என்று சொல்ல முடியுமா என சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்திக்கு சவால் விடுக்க விரும்புகிறேன். ஆனால் தாய், மகன் இரண்டு பேரும் நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த சட்டத்தால் எந்தவொரு இந்திய குடிமகனின் குடியுரிமையையும் பறிக்க முடியாது. எனவே இந்த சட்டத்தை படிக்க வேண் டும் என முஸ்லிம் சகோதரர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடியரசு தினமான வருகிற 26-ந் தேதிக்குள் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என ஐதராபாத் எம்.பி. அசாவுதீன் ஒவைசி கூறியது பற்றி கேட்டதற்கு, ஜனவரி 26-ஐ பற்றி மறந்து விடுங்கள். அடுத்த 26 ஆண்டுகளுக்கு இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது, என்றார்.
    Next Story
    ×