search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் கட்டண உயர்வு
    X
    ரெயில் கட்டண உயர்வு

    பயணிகள் ரெயில் கட்டணம் உயர்வு - இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

    பயணிகளுக்கான ரெயில் கட்டணங்களை இந்தியன் ரெயில்வே இன்று திடீரென உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    பயணிகளுக்கான ரெயில் கட்டணங்களை இந்தியன் ரெயில்வே இன்று திடீரென உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. குளிர்சாதன வசதி ரெயில்களுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

    இரண்டாம் வகுப்பு சாதாரண ரெயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள பயணிகள் ரெயில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    இந்த கட்டண உயர்வு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது. மேலும், சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×