search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    ஒரு அங்குல நிலத்தைகூட மராட்டியத்துக்கு விட்டு தரமாட்டோம்- எடியூரப்பா பேட்டி

    எல்லலைப் பிரச்சினை தொடர்பாக ஒரு அங்குல நிலத்தைகூட மராட்டியத்துக்கு விட்டு தரமாட்டோம் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக - மராட்டிய மாநிலங்கள் இடையே மீண்டும் எல்லலைப் பிரச்சினை தலை தூக்கி உள்ளது. கர்நாடக மாநிலம் பெல காவியில் உள்ள மராட்டிய மொழி பேசும் கிராம மக்கள் வசிக்கும் கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டிய அமைப்புகள் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேயிடம் மனு கொடுத்தனர். இதனால் கர்நாடக - மராட்டிய எல்லை பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.

    எடியூரப்பா, உத்தவ் தாக்கேர உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன கோல்காபூரில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து இன்று 3-வது நாளாகநிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரு அங்குல நிலத்தை கூட மராட்டிய மாநிலத்திற்கு விட்டு தரமாட்டோம் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாஜன் ஆணையத்தின் அறிக்கையில் எந்தெந்த பகுதி கர்நாடகம் மற்றும் மராட்டியத்துக்கு செல்ல வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் லாபங்களுக்காக மராட்டிய முதல்- மந்திரி மாநில எல்லைப்பிரச்சினையை கிளப்பி இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    பெலகாவி மாவட்டத்தின் ஓர் அங்குலத்தையும் மராட்டியத்துக்கு விட்டுத்தர மாட்டோம். மராத்தி மற்றும் கன்னட மக்களிடையே பிளவை ஏற்படுத்த மராட்டிய முதல்-மந்திரி உத்தல்தாக்கரே முயற்சிக்கிறார்.

    உத்தல்தாக்கரே

    கர்நாடகத்தின் நிலத்தை யாருக்கும் விட்டுத் தரும் பேச்சுக்கே இடமில்லை என்பதால் கன்னட மக்கள் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை காப்பாற்ற வேண்டும். ஏதோ ஒரு கருத்தைக் கூறி விட்டதாலேயே குழப்பம் அடைய தேவையில்லை. கன்னட மக்கள் அமைதியை இழந்துவிடக் கூடாது ஏன்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×