search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உத்தரபிரதேசத்தில் பனி மூட்டத்தால் விபத்து- 6 பேர் பலி

    உத்தரபிரதேச மாநிலத்தில் பனி மூட்டம் காரணமாக கார் கால்வாயில் பாய்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பனிமூட்டம் கடுமையாக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    பனி மூட்டம் காரணமாக சாலையில் அருகில் செல்லும் வாகனங்கள்கூட தெரியவில்லை. இதனால் காலை நேரத்திலேயே வாகனங்கள் விளக்கை ஏரியவிட்டபடி செல்கின்றன.

    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பனி மூட்டம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு ‘ரெட் அலார்ட்’ என்ற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பனி மூட்டம் காரணமாக நடந்த விபத்தால் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு காரில் 11 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் பனி மூட்டம் நிலவியது. தன்கவூர் என்ற பகுதியில் சென்றபேது பனிமூட்டத்தால் கார் அங்குள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.

    இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு விரைந்து வந்து கால்வாய்க்குள் விழுந்த காரை வெளியே எடுத்தனர்.

    அதில் இருந்த 11 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் மகேஷ், கி‌ஷன்லால், நீரஸ், ராம், மானு, நேத்திரபால் ஆகிய 6 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் காரில் டெல்லியை நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் இன்றும் கடும் பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக ரெயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி அனுப்பப்பட்டன. இன்று டெல்லி விமான நிலையத்துக்கு வரவேண்டிய 3 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

    அதேபோல் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 30 ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    டெல்லியில் இன்று காலை 4.6 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×