search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசன ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

    திருப்பதி கோவிலில் புத்தாண்டு தரிசன ஏற்பாடுகள் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பள்ளி, கல்லூரி விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

    நேற்று இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம் ரூ.300 விரைவு தரிசனத்தில் 3 மணி நேரத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆங்கில புத்தாண்டு பிறப்பு முதல் நாளன்று ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் திருமலைக்கு அதிகளவில் வருவது வழக்கம்.

    ஆந்திர அரசின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் கிடையாது. இருந்தாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி கோவிலில் தெலுங்கு வருட பிறப்பில் மட்டுமே சிறப்பு அலங்காரம் அபிஷேக பூஜைகள் நடைபெறும்.

    ஆங்கில புத்தாண்டு தினத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை.

    ஆனாலும் புத்தாண்டு தினத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    இது தொடர்பான திருமலை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் புத்தாண்டு தரிசன ஏற்பாடுகள் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு திருப்பதி தேவஸ்தான சார்பில் 12 லட்சம் காலண்டர்கள் அச்சடிக்கப்பட்டன. கடந்த 10-ந்தேதி காலண்டர்கள் விற்பனைக்கு வந்தது. அவை 2 நாட்களில் விற்று தீர்ந்து விட்டன. இதனால் காலண்டர்கள் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்ட மேல்சாட் வஸ்திரங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை இணைய தளம் மூலம் ஏலம் விடப்படுகிறது.

    Next Story
    ×