search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் கடுங்குளிர்
    X
    டெல்லியில் கடுங்குளிர்

    டெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்- வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியசுக்கு குறைந்தது

    டெல்லியில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு 2.4 டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை சென்றது.
    புதுடெல்லி:

    டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். இந்த ஆண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு உள்ளது. கடந்த சில வாரங்களாக குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலையில் நீண்ட நேரமாகியும் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் தட்பவெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    டிசம்பர் மாதத்தில் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரியாக உள்ளது. 1901-ம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலையாக 17.3 என பதிவாகி இருந்தது. நேற்று 4.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரியாக இருந்தது. இந்த கடுமையான குளிரால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். 

    டெல்லி ராஜபாதை

    இந்நிலையில், இன்று அதைவிட கடுமையான குளிர் வாட்டியது. காலை 6.10 மணி நிலவரப்படி 2.4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது. இதுவே இந்த சீசனில் மிக குறைந்த வெப்பநிலை ஆகும். இன்று பார்வை தூரமும் மிகவும் குறைந்தது. 150 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. 

    இன்னும் ஓரிரு தினங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×