search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின்றி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது - ராகுல் காந்தி

    சத்தீஸ்கரில் பழங்குடியினர் நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ராஷ்டிரீய ஆதிவாசி நிர்தியா மகோற்சவ விழா இன்று தொடங்கியது. இந்த விழா 3 நாள் நடைபெறும்.
    இதன் தொடக்க விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் தற்போது நிலவி வரும் நிலையை நீங்கள் அறிவீர்கள். மற்ற மாநிலங்களிலும் என்ன பிரச்சனைகள் நிலவுகின்றன என உங்களுக்கு தெரியும்.

    அனைத்து மதங்கள், சாதிகளை சேர்ந்த மக்கள் இல்லாமல் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது. அனைத்துத் தரப்பு மக்களின் குரல் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் கேட்கப்படும் வரை வேலைவாய்ப்பின்மை, மாநில பொருளாதாரம் ஆகியவற்றை சீர்படுத்த ஒன்றும் செய்ய முடியாது.

    இந்தியாவில் வன்முறை, பெண்கள் தெருக்களில் செல்ல பாதுகாப்பில்லாமல் உணருவது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது ஆகியவற்றை உலகம் பார்க்கிறது. அனைத்துத் துறைகளிலும் இந்தியா பின்னோக்கி செல்கிறது.

    என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பணமதிப்பிழப்பு என அனைத்தும் ஏழை மக்கள் மீதான வரி. இவையனைத்தும் ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். இதே நிலை நீடித்தால் எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் என்பதே ஏழைகளின் கேள்வி என தெரிவித்தார்.
    Next Story
    ×