search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    குடியுரிமை சட்டம்: எதிர்கட்சிகள் மக்களை தவறான பாதையில் வழிநடத்துகிறது - அமித் ஷா

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொதுமக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த 15-ம் தேதி டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

    இந்த மோதலின் போது மாணவர்கள் அங்கிருந்த பஸ்கள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீ வைத்து கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.   

    இந்நிலையில், டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமாக அமித் ஷா கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:- 

    'காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் திருத்தப்பட்ட குரியுரிமை சட்டம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் பொதுமக்களை தவறான பாதையில் வழிநடத்தி டெல்லியின் அமைதியை சீர்குலைக்கின்றனர்.  
       
    டெல்லி மக்களே நீங்கள் பாஜகவுக்கு அனைத்து எம்.பி. இடங்களையும் (7 தொகுதிகள்) கொடுத்துள்ளீர்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் எங்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் வாய்ப்பு கொடுக்க நேரம் வந்துவிட்டது. டெல்லியில் தாமரை மலரும். 

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை முதல் மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் செயல்படுத்துவது இல்லை. மாறாக மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி தான் கொண்டுவந்த திட்டங்கள் என கூறவே விரும்புகிறார்.
    Next Story
    ×