search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கிரிமினல்கள் சாவுக்கு இழப்பீடு அளிப்பது மன்னிக்க முடியாத குற்றம்: எடியூரப்பா ஆவேசம்

    மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் பலியான இருவருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் முடிவை திரும்பப்பெற்ற எடியூரப்பா, கிரிமினல்களின் சாவுக்கு இழப்பீடு அளிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என குறிப்பிட்டுள்ளார்.
    பெங்களூரு:

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19-ம் தேதி மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
     
    இதில் படுகாயமடைந்த 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    மங்களூரு துப்பாக்கிச் சூடு - உயிரிழந்தவர்கள்

    மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா கடந்த 22-ம் தேதி அறிவித்தார்.

    இதற்கிடையே, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருமே குற்றப் பின்னணி கொண்டவர்கள். அவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன என கர்நாடக மாநில போலீசார்
    தெரிவித்திருந்தனர்.

    சமீபத்தில் மங்களூரு நகருக்கு சென்று துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியை எடியூரப்பா பார்வையிட்டார். போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்கனவே தெளிவாக திட்டமிட்டு செய்த சதி வேலை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து அங்கிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அள்ளிச்செல்ல வன்முறையாளர்கள் முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக, தட்சினா கன்னடா மாவட்டத்தை சேர்ந்த அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா, மங்களூருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என வெளியான அறிவிப்பை திரும்பப் பெறுவதாக இன்று தெரிவித்துள்ளார்.

    கிரிமினல்களின் சாவுக்கு இழப்பீடு அளிப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×