search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    டெல்லி செல்லும் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கிறார்

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு டெல்லி சென்று அழைப்பு விடுக்க உள்ளார்.
    ராஞ்சி:

    81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
     
    இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான  ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.

    ஹேமந்த் சோரன்

    இதற்கிடையே, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், மாநில கவர்னர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளித்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன், டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் இன்று தலைநகர் டெல்லி செல்கிறார். அங்கு அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார். அப்போது, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கிறார்.
    Next Story
    ×