search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திய போலீசார்
    X
    ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திய போலீசார்

    மீரட் நகரில் ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய போலீசார்

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    லக்னோ:

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் சில மாநிலங்களில் வன்முறையாக வெடித்த சம்பவங்களில் 15-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

    குறிப்பாக,  உத்தர பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கடந்த 20-ம் தேதி பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் பலியாகினர்.

    இந்நிலையில், கிழக்கு உத்தர பிரதேசம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 22-ம் தேதி பிஜ்னோர் மாவட்டத்துக்கு வந்தார். நாஹ்தாவுர் பகுதியில் உள்ள கொல்லப்பட்ட இருவர் குடும்பத்தாரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். 

    மீரட்டுக்குள் அனுமதிக்க மறுத்த போலீசார்

    இதைதொடர்ந்து, உத்தர பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தங்கை பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று டெல்லியில் இருந்து கார் மூலம் வந்தனர்.

    இன்று பிற்பகல் அவர்களை மீரட் மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி, டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×