search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமன்
    X
    வங்கதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமன்

    குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்கதேசம் அறிவிப்பு

    தேசிய குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆர்.சி.) இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்கதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.
    டாக்கா:

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக வங்காளதேசம் தனது கருத்தை தற்போது பதிவு செய்திருக்கிறது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசிய குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆர்.சி.) இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆகும். இது தங்களது சொந்த பிரச்சினை என இந்திய அரசு எங்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது. எந்த சூழலிலும் இது வங்காளதேசத்தை பாதிக்காது என பிரதமர் மோடி, எங்கள் (வங்காளதேசம்) பிரதமர் ஷேக் ஹசினாவிடம் உறுதியளித்து உள்ளார்.

    எனவே இந்தியாவை நாங்கள் நம்புகிறோம். அதேநேரம் இந்தியாவில் ஏற்படும் நிலையற்ற தன்மை, அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கும். அதுதான் கவலையளிக்கிறது. எனினும் இந்த பிரச்சினையில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நாங்கள் நம்புகிறோம். இது அவர்கள் பிரச்சினை. எனவே அவர்கள்தான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அப்துல் மொமன் கூறினார்.
    Next Story
    ×