search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே
    X
    மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரை விவசாயக்கடன்கள் தள்ளுபடி - உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் தலா 2 லட்சம் ரூபாய் வரை விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இக்கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். 

    இதற்கிடையே, அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. 

    இதனால், வங்கிகளில் பெற்றிருந்த விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது.

    கோப்பு படம்

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபை இன்று கூடியது. அதில் பங்கேற்ற முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, 'வங்கிகளில் செப்டம்பர் 30-ம் தேதிவரை விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக்கடன் தொகை அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும். 

    மேலும், விவசாயக் கடனை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×