search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை அமைச்சகம்
    X
    மத்திய உள்துறை அமைச்சகம்

    குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக மக்கள் யோசனை கூறலாம் -மத்திய உள்துறை அமைச்சகம்

    குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக மக்கள் யோசனை கூறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    குடியுரிமை  சட்டதிருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் வலுத்துள்ளன.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் நடைபெறுவதை அடுத்து, மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு உட்பட  பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களுக்கு சேதம் என வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

    இந்த நிலையில் நேற்று உள்துறை அமைச்சகம் குடியுரிமை  சட்டத்திருத்ததை அமல்படுத்துவதும் குறித்தும் அது தொடர்பாக நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியது.

    உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

    நாங்கள் அனைவரையும் கலந்தாலோசித்த பின்னர் தான் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்தோம், விவாதங்கள் நடைபெற்றன. அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல உரிமை உண்டு. மக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. பரிந்துரைகளை வழங்க விரும்புவோர் கொடுக்கலாம், நாங்கள் சட்ட விதிகளை உருவாக்கும் பணியில் இருக்கிறோம்.

    சட்டத்தை அமல்படுத்துவது மத்திய அரசின் கீழ் உள்ளது. அனைவரும் செயல்படுத்துவதில் யார் செயல்படுத்தினார்கள் என்பதை நாங்கள் இறுதி செய்வோம். இது டிஜிட்டல் மற்றும் எளிதான செயல்முறையாக இருக்கும், இதனால் மக்கள் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
    Next Story
    ×