search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்
    X
    வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்ட தேர்தல்- 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடைசி கட்டமாக 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    ராஞ்சி:

    81 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.  

    சந்தல் பர்கானா பிராந்தியத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 16 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அனைத்து வாக்காளர்களும் தவறாமல்  வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த தேர்தலில் மொத்தம் 40,05,287 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 5389 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    வாக்குச்சாவடியில் பாதுகாப்பு

    இந்த தேர்தலில் 2 மந்திரிகள், முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநில வேளாண்துறை மந்திரி ரன்தீர் சிங் பாஜக சார்பில் சரத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி லூயிஸ் மராண்டி, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை எதிர்த்து தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இன்று தேர்தல் நடைபெறும் 16 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மாலை 3 மணிக்கும், மீதமுள்ள தொகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடையும். 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    Next Story
    ×