என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் கடும் குளிர்- கடவுள் சிலைகளுக்கு கம்பளி உடை அணிவிப்பு
Byமாலை மலர்19 Dec 2019 12:35 PM IST (Updated: 19 Dec 2019 12:35 PM IST)
உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் கடவுள் சிலைகளுக்கும் உயிர் இருப்பதாகவே நம்பும் பக்தர்கள் அந்த சிலைகளுக்கு கம்பளி உடை அணிவித்து வழிபடுகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் உறைபனி நிலவுவதால் அங்குள்ள மக்கள் கடும் குளிரை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் கோவில்களில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி உடுத்தப்படுகிறது. வாரணாசியில், படா கணேஷ் கோவிலில், கருவறை தெய்வத்தை அங்குள்ள கோயில் பூசாரிகள் குல்ட் என்று கூறப்படும் கனத்த உடையால் மூடி வைத்திருக்கிறார்கள்.
விநாயகரின் வாகனமான மூஷிகத்திற்கும்(எலி) ஒரு கம்பளி சால்வை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவன் கோயில்களில், சிவலிங்கங்களும் கூட இந்தக் குளிர்காலத்தில் சால்வையால் மூடப்பட்டே காட்சியளிக்கின்றன.
வினோதமான பழக்கமாக இருக்கிறதே? என்ற கேள்விக்கு ஆச்சார்யா சமீர் உபாத்யாயா பதில் அறிக்கையில் கடவுள் சிலைகள் ‘பிராண் பிரதிஷ்டா’ என்ற பெயரில் எழுந்தருளல் செய்யப்பட்ட பிறகு அங்கு இருக்கும் கடவுள் சிலைக்கு உயிர் இருப்பதாகவே நம்பப்படுகிறது.
அப்படி கடவுள் உயிர் உள்ளவராக கருதப்படுவதால் இங்கு நிலவும் வானிலை மாறுபாடுகளால் அவரது உடல்நலன் கெட்டு விடக்கூடாது என்பதால் அவர் இப்படி பாதுகாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
அயோத்தியில், ராம் ஜென்மபூமி தளத்தில் உள்ள தற்காலிக கோவிலில் உள்ள ராம் லல்லா ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார், சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், காற்றைச் சூடாக வைத்திருக்க அங்கு ஒரு ஹீட் புளோயர் நிறுவப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது,
அதே நேரத்தில் அங்கு வருகை தரும் பக்தர்கள் குளிரைச் சமாளிக்க அவர்களுக்கென திறந்த வெளியில் நெருப்பு மூட்டி கனப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பக்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றார் போல கடவுள்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் கம்பளி ஆடைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உறைபனி நிலவுவதால் அங்குள்ள மக்கள் கடும் குளிரை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் கோவில்களில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி உடுத்தப்படுகிறது. வாரணாசியில், படா கணேஷ் கோவிலில், கருவறை தெய்வத்தை அங்குள்ள கோயில் பூசாரிகள் குல்ட் என்று கூறப்படும் கனத்த உடையால் மூடி வைத்திருக்கிறார்கள்.
விநாயகரின் வாகனமான மூஷிகத்திற்கும்(எலி) ஒரு கம்பளி சால்வை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவன் கோயில்களில், சிவலிங்கங்களும் கூட இந்தக் குளிர்காலத்தில் சால்வையால் மூடப்பட்டே காட்சியளிக்கின்றன.
வினோதமான பழக்கமாக இருக்கிறதே? என்ற கேள்விக்கு ஆச்சார்யா சமீர் உபாத்யாயா பதில் அறிக்கையில் கடவுள் சிலைகள் ‘பிராண் பிரதிஷ்டா’ என்ற பெயரில் எழுந்தருளல் செய்யப்பட்ட பிறகு அங்கு இருக்கும் கடவுள் சிலைக்கு உயிர் இருப்பதாகவே நம்பப்படுகிறது.
அப்படி கடவுள் உயிர் உள்ளவராக கருதப்படுவதால் இங்கு நிலவும் வானிலை மாறுபாடுகளால் அவரது உடல்நலன் கெட்டு விடக்கூடாது என்பதால் அவர் இப்படி பாதுகாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
அயோத்தியில், ராம் ஜென்மபூமி தளத்தில் உள்ள தற்காலிக கோவிலில் உள்ள ராம் லல்லா ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார், சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளதால், காற்றைச் சூடாக வைத்திருக்க அங்கு ஒரு ஹீட் புளோயர் நிறுவப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது,
‘லட்டு கோபால்’ என்று அழைக்கப்படும் அவரது குழந்தை பருவ அவதார சிலையின் மீது மிகுந்த கவனமும், அக்கறையும் காட்டப்படுகிறது. மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தெய்வத்தை மறைக்க சிறிய கம்பளி சுவெட்டர்ஸ் மற்றும் சால்வைகள் பயன்படுத்தப்படுகின்றன,
சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பக்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றார் போல கடவுள்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் கம்பளி ஆடைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
Next Story
×