search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி பாப்டே
    X
    தலைமை நீதிபதி பாப்டே

    நிர்பயா வழக்கு- சீராய்வு மனு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகல்

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனு மீதான விசாரணை அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

    மீதமுள்ள 4 பேரில் மூன்று பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் நான்காவது குற்றவாளியான அக்சய் குமார் சிங், சமீபத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு டிசம்பர் 17-ம்தேதி (இன்று) விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மதியம் சீராய்வு மனு மீது விசாரணை தொடங்கியது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகுவதாக தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். 

    அத்துடன், இவ்வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு வேறு அமர்வில் விசாரிக்கப்படும்  என்றும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
    Next Story
    ×