search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் ஜக்தீப் தங்கர் மற்றும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி
    X
    கவர்னர் ஜக்தீப் தங்கர் மற்றும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் தொடரும் போராட்டம்: மம்தா பானர்ஜிக்கு கவர்னர் திடீர் அழைப்பு

    மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தன்னை நாளை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துரைக்க வேண்டுமென மம்தா பானர்ஜிக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
    கொல்கத்தா:

    குடிரியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

    இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ரெயில் நிலையங்கள், அரசு பஸ்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீவைத்து கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டத்தில் வன்முறை வெடித்து வருகிறது. போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் வருகின்றனர். 

    மாநில முதல் மந்திரியான மம்தா பானர்ஜி பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மம்தா பானர்ஜி நாளை தனது அலுவலகத்திற்கு நேரில் வந்து நிலைமையை எடுத்துரைக்க வேண்டுமென மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர் அழைப்பு விடுத்துள்ளார். 

    மேற்கு வங்காள அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×