search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தல் ஆணையம்
    X
    இந்திய தேர்தல் ஆணையம்

    ராகுல் காந்தியின் ‘ரேப் இன் இந்தியா’ விமர்சனம் - தேர்தல் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

    ராகுல் காந்தியின் ‘ரேப் இன் இந்தியா’ விமர்சனம் குறித்து ஜார்கண்ட் தேர்தல் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் பெருகிவரும் பாலியல் குற்றங்களை கடுமையாக விமர்சித்தார்.

    ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் கற்பழிப்புகளால் ‘ரேப் இன் இந்தியா’ என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என ராகுல் அக்கூட்டத்தில் பேசியிருந்தார்.

    ராகுல் காந்தியின் கருத்திற்கு எதிராக பாஜக பெண் எம்.பி.க்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

    பாலியல் குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களை ராகுல் காந்தி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார் என டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்பட சில பாஜக பெண் தலைவர்கள் நேரில் சென்று புகார் அளித்தனர். 

    இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘ரேப் இன் இந்தியா’ விமர்சனம் குறித்து ஜார்கண்ட் மாநில தேர்தல் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, இச்சம்பவம் குறித்து, நான் கூறிய கருத்து உன்மைதான். அதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×