search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாவர்க்கர்
    X
    சாவர்க்கர்

    குடியுரிமை சட்டம் சாவர்க்கரின் கண்ணோட்டத்துக்கு எதிரானது - உத்தவ் தாக்கரே அதிருப்தி

    குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசால் செய்யப்பட்ட திருத்தம் சாவர்க்கரின் கண்ணோட்டத்துக்கு எதிரானது என சிவசேனா கட்சி தலைவரும் மகாராஷ்டிரா முதல் மந்திரியுமான உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே நாக்பூர் நகரில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசால் செய்யப்பட்ட திருத்தம் சாவர்க்கரின் கண்ணோட்டத்துக்கு எதிரானது தெரிவித்தார்.

    முதலில் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது? என்று பார்ப்போம். அதன் பின்னர் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம்.

    உத்தவ் தாக்கரே

    நாட்டில் நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே குடியுரிமை சட்டத்திருத்தம் போன்ற விவகாரங்களை மத்திய அரசு உயர்த்தி பிடிக்கிறது என்றும் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

    எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்திருத்தம் செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பிய தாக்கரே, இதற்கு எதிராக வன்முறை வெடித்திருப்பது ஏன்? எனவும் வினவியுள்ளார்.
    Next Story
    ×