search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிப்புன் போரா
    X
    ரிப்புன் போரா

    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோம் கன பரிஷத் மற்றும் அசாம் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    கவுகாத்தி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டவடிவம் பெற்றுள்ளது.

    மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் சார்பில் கடந்த 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 18-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அசாம் அரசு பணியாளர்கள் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.

    இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோம் கன பரிஷத் மற்றும் அசாம் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

     ஜோயிநாத் சர்மா

    அசாம் மாநிலத்தில், குறிப்பாக பிரம்மப்புத்திரா சமவெளி பகுதியில் இந்த குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என நேற்று நடைபெற்ற அசோம் கன பரிஷத் அமைப்பின் மேல்மட்ட கூட்டத்தில் திர்மானிக்கப்பட்டதாக ஜோயிநாத் சர்மா இன்று தெரிவித்தார்.

    இதேபோல், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாம் மாநில காங்கிரஸ் சார்பில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட் மனு’ தாக்கல் செய்வோம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரிப்புன் போரா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×