search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்த 27 நாளில் ரூ.100 கோடி வருமானம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்த 27-வது நாளில் 100 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்திபெற்றதாகும். 

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளில் இருந்தே சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    சபரிமலையில் தற்போது மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் இருமுடி கட்டு சுமந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பியபடி சபரிமலைக்கு சென்றவண்ணம் உள்ளனர்.

     நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தபடி இருப்பதால் பக்தர்களை வரிசையில் போலீசார் சன்னிதானம் நோக்கி அனுப்பி வருகிறார்கள். இதனால் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது.

    ஐயப்பன் கோவிலில் பக்தர்கள்

    மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவசம்போர்டு செய்து கொடுத்து உள்ளது. அரவணை, அப்பம் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு கோவிலுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நடை திறந்து 27 நாட்கள் (டிசம்பர் 14) ஆன நிலையில் உண்டியல் காணிக்கை, பிராசாத விற்பனை போன்றவற்றின் மூலம் கோவிலுக்கு வருமானமாக 100 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. 

    கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 60 லட்ச ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்திருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×