search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரி படம்
    X
    மாதிரி படம்

    ரூ.15 லட்சத்திற்காக கடத்தப்பட்ட மணிப்பூர் முதல்மந்திரியின் சகோதரர் கொல்கத்தாவில் மீட்பு

    15 லட்சம் ரூபாய்க்காக கடத்தப்பட்ட மணிப்பூர் மாநில முதல்மந்திரியின் சகோதரர் டோங்பிராம் லுகோய் சிங்கை போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.
    கொல்கத்தா:

    மணிப்பூர் மாநில முதல்மந்திரியாக பதவி வகிப்பவர் பிரேன்சிங். இவருக்கு டோங்பிராம் லுகோய் சிங் என்ற சகோதரர் உள்ளார். இவர் கொல்கத்தாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று அந்த வீட்டிற்குள் நுழைந்து 5 பேர் கொண்ட கும்பல் பொம்மை துப்பாக்யைகி காட்டி மிரட்டி தங்களை சிபிஐ அதிகாரிகள் என கூறி டோங்பிராம் சிங்கையும் அவரது உதவியாளரையும் கடத்திச் சென்றனர். 

    பின்னர் டோங்பிராம் சிங்கின் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் உங்கள் கணவரை விடுதலை செய்யவேண்டுமானால் 15 லட்ச ரூபாய் கொடுங்கள் என மிரட்டல் விடுத்தனர். இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    மணிப்பூர் முதல்மந்திரி பிரேன்சிங்

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் பெனியபுகூர் என்ற பகுதியில் உள்ள ஒரு மறைவிடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த டோங்பிராம் சிங் மற்றும் அவரது உதவியாளரை மீட்டனர். மேலும், இவர்களை கடத்தில் சென்ற 5 பேர் கொண்ட கும்பலையும் கைது செய்தனர். 

    கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் மணிப்பூர், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் பணத்திற்காகவே முதல்மந்திரியின் சகோதரரை கடத்தியுள்ளதாக தெரிகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×