search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம் மக்கள் போராட்டம்
    X
    அசாம் மக்கள் போராட்டம்

    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு - அசாம் அரசு பணியாளர்கள் 18-ம் தேதி வேலைநிறுத்தம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 18-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அசாம் அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    கவுகாத்தி:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து சட்டமாக உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
     
    இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    போராட்டத்தில் வன்முறை

    மேலும் இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் தங்கள் மாநிலங்களில் இதை அமல்படுத்தமாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அறிவித்து உள்ளன.

    இந்நிலையில், இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 18-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அசாம் அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×