என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதம் நீட்டிப்பு
Byமாலை மலர்14 Dec 2019 11:46 AM GMT (Updated: 14 Dec 2019 11:46 AM GMT)
பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா (வயது 82), மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா இருப்பிடம் குறித்து மத்திய அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆனால், செப்டம்பர் 15-ம் தேதியே பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகளுக்கு காவலில் வைத்திருக்க முடியும். இதையடுத்து பரூக் அப்துல்லா தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது வீடு கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பரூக் அப்துல்லா மீது விதிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் உள்ள அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Next Story
×