search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் தலைமை செயலாளர் அலுவலகத்தில் தேசியக்கொடி மற்றும் பிரதமர் மோடி (கோப்பு படம்)
    X
    காஷ்மீர் தலைமை செயலாளர் அலுவலகத்தில் தேசியக்கொடி மற்றும் பிரதமர் மோடி (கோப்பு படம்)

    காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி பிரதமர் மோடி அங்கு தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளார் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இதற்கிடையில் 15 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட தேர்தல் வரும் திங்கள் கிழமை (டிசம்பர் 16) நடைபெற உள்ளது. 

    இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், அம்மாநிலத்தின் கிரிடிக் மாவட்டத்தில் பாஜக கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அமித் ஷா

    ' நாங்கள் (பாஜக) திருத்தியமைக்கப்பட்ட குரியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளோம். ஆனால், இது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் வன்முறையை தூண்டி விடுகின்றனர்.

    அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாதுகாக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். 

    நாட்டின் அணிகலனாக காஷ்மீர் உருவெடுத்து உள்ளது. சிறப்பு அந்தஸ்த்து வழங்க வகை செய்யும் 370, 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கியதன் மூலம் பிரதமர் மோடி காஷ்மீரில் மூவர்ணக் கொடியை  பறக்க விட்டுள்ளார்’ என தெரிவித்தார்.   
    Next Story
    ×