search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அவருக்கு பதில் சோனியா தற்காலிக தலைவர் பொறுப்பை ஏற்று உள்ளார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர். கடந்த சில தினங்களாக காங்கிரசில் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி புபேஷ், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் ஆகியோர் ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். சில மாநில காங்கிரஸ் அமைப்புகள் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக தெரிகிறது.

    மூத்த தலைவர்களின் வலியுறுத்தல் காரணமாக ராகுலின் மனதிலும் சற்று மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டிருப்பது அவரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் காங்கிரசுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆக ராகுல் சம்மதித்துள்ளார்.

    காங்கிரஸ்

    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ராகுல் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×