search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சலி செலுத்திய மேனகா காந்தி
    X
    அஞ்சலி செலுத்திய மேனகா காந்தி

    சஞ்சய் காந்தி நினைவிடத்தில் மேனகா, வருண் காந்தி அஞ்சலி

    சஞ்சய் காந்தி பிறந்த நாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி.

    அவரது பிறந்த தினமான இன்று டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவிடத்தில் அவரது மனைவி மேனகா காந்தி, மகன் வருண் காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க.வினரும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 23-6-1980 அன்று டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தின் அருகே புதிய விமானம் ஒன்றை ஓட்டியபோது கீழே விழுந்து நொறுங்கியதில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    Next Story
    ×