search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்ராம் ரமேஷ்
    X
    ஜெய்ராம் ரமேஷ்

    குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு

    மத்திய அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. 

    இந்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் அங்குபதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

    உச்ச நீதிமன்றம்

    இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

    குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார். 
    Next Story
    ×