search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
    X
    சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

    சிவசேனாவுக்கு உள்துறை ஒதுக்கீடு - தேசியவாத காங்கிரசுக்கு நிதி, காங்கிரசுக்கு வருவாய்த்துறை

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேசியவாத காங்கிரசுக்கு நிதித்துறையும், காங்கிரசுக்கு வருவாய்த்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    மும்பை: 

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே கடந்த மாதம் முதல் மந்திரியாக பதவியேற்றார். 

    சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் அமைச்சரவையில் மந்திரி பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தேசியவாத காங்கிரசுக்கு நிதித்துறையும், காங்கிரசுக்கு வருவாய்த்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக பதவி வகிக்கும் சிவசேனா கட்சிக்கு முக்கிய துறையான உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

    இதேபோல் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரசுக்கு நிதித்துறை, வீட்டுவசதி, பொதுநலம், கூட்டுறவு போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    மற்றொரு கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வருவாய்த்துறை, எரிசக்தி, கல்வி, பொதுப்பணி, துணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×