search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல் ரஹ்மான்
    X
    அப்துல் ரஹ்மான்

    குடியுரிமை சட்டத்துக்கு ஐ.பி.எஸ். அதிகாரி எதிர்ப்பு - பதவியை ராஜினாமா செய்தார்

    குடியுரிமை திருத்த மசோதாவை பாராளுமன்ற மேல்-சபையில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.பி.எஸ். அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
    மும்பை:

    குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் கலவரம் வெடித்து பதட்டமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவை பாராளுமன்ற மேல்-சபையில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அப்துல்ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

    டுவிட்டரில் பதிவிட்ட ராஜினாமா கடிதம்


    குடியுரிமை திருத்த மசோதா இந்தியாவின் மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றியதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது சட்டத்தை மீறிய செயலாகும்.

    நாளை (இன்று) முதல் அலுவலகத்துக்கு சென்று எனது பணியை தொடரப்போவதில்லை. நீதி மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அனைத்து மக்களும் ஜனநாயக முறையில் இந்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    வரலாறு சிதைக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட் போது தவறான தகவல்களை அமித்ஷா தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×