search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    இணையத்தில் வைரலாகும் ஐயப்பன் மாலை அணிந்த மாணவன் புகைப்படம்

    ஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கும் மாணவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    ஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கும் பள்ளி மாணவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருக்கும் மாணவன் ஐயப்பன் மாலை அணிந்து இருந்ததால், பள்ளி நிர்வாகம் மாணவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

    மாணவன் கழிவறையை சுத்தம் செய்த போது, கைகளில் ஆசிட் விழுந்து காயம் ஏற்பட்டதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியை சேர்ந்த பள்ளியில் அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது. 

    வைரல் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், புகைப்படத்தில் இருக்கும் மாணவன் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருவது தெரியவந்துள்ளது. மேலும் மாணவன் கையில் ஏற்பட்ட காயம் ஆசிட் விழுந்ததால் ஏற்பட்டது என்றும் தெரியவந்து இருக்கிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    உண்மையில் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வகத்தை சுத்தம் செய்ய சொன்னார். சுத்தம் செய்யும் போது ஆய்வகத்தில் இருந்த பழைய ஆசிட் பாட்டில்களை மாணவர் அப்புறப்படுத்த முயன்றதில், கைதவறி ஆசிட் அவரது கைகளில் விழுந்தது. காயத்தில் துடித்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

    அந்த வகையில் மாணவர்கள் ஐயப்ப மாலை அணிந்து இருந்ததால் கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்டனர் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியானது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×